Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முகப்பு சேவைகள் கழிவுப் பொருட்களை அகற்றும் சேவை

கழிவுப் பொருட்களை அகற்றும் சேவை

அறிமுகம்

கடல் மாசுறல் தடுப்புச் சட்டத்தின் எற்பாடுகளின் கீழ் கப்பல்களில் பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை அகற்றும் வழங்குநர்கள் (கொழும்பு மற்றும் ஏனைய வர்த்தகத் துறைமுகங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற) பின்வரும் பிரிவுகளின் கீழ் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையில் பதிவு செய்துகொள்ளல் வேண்டும்.

முதலாவது பிரிவு - எண்ணெய்க் கழிவுகள்
இரண்டாவது பிரிவு - திண்மக் கழிவுப் பொருட்கள்

நிபந்தனைகள்

01.
பதிவு செய்யப்பட்ட வழங்குநர்கள் மாத்திரம் கப்பல்களில் பிறப்பிக்கப்படும் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
02. கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற MP/WRS/3 அனுமதிப் பத்திரதாரர்களுக்கு மாத்திரம் கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு அனுமதியுண்டு.
03. பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்கள் MP/WRS/3 அனுமதிப் பத்திரத்தின் மூன்றாவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்கள் தவிர்ந்த ஏனைய சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
04. பதிவுகள் இரத்துச் செய்யப்படும் சந்தர்ப்பங்கள்,
பதிவு செய்யப்பட்ட வழங்குநர்களினால் MP/WRS/4 அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் ஒழுங்கு விதிகள் என்பவற்றினை கடைபிடிப்பதற்கு தவறும் பட்சத்தில்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தினை மீறியுள்ள சந்தர்ப்பத்தில்.
MP/WRS/3 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றாத சந்தர்ப்பங்களில்.

கழிவுப் பொருள் அகற்றும் சேவை

கப்பல்களினுள் பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பான நிபந்தனைகள் மற்றும் ஒழுங்கு விதிகள். 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசுறல் தடுப்பு சட்டத்தின் 13 ஆவது பிரிவின் கீழ்இந்த ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சேவைகள்

இச்சேவையானது கப்பல்களின் மூலம் பிறப்பிக்கப்படும் கழிவுப் பொருட்களை அகற்றும் சேவை என்றழைக்கப்படும்.
கழிவுப் பொருட்களை அகற்றும் சேவையினை வழங்குவதற்காக முன்வரும் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களாகக் கருதப்படும்.
கப்பல் உரிமையாளர்கள், கப்பல் தலைவர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் ஆகியோர் மேற்கூறிய கழிவுப் பொருட்களை அகற்றும் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்காக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையில் பதிவு செய்த வழங்குநர்களிடமிருந்து மாத்திரமே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.


பயன்படுத்தும் உபகரணங்கள்

குறித்த துறைமுகம் ஒன்றிலிருந்து பயணம் செய்யும் கப்பலில் இருந்து பிறப்பிக்கப்படும் கழிவுப் பொருட்களுக்கு.
உயிர், சொத்துக்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றினை உறுதி செய்வதற்காக கப்பல்களில் பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை அகற்றும் நோக்குடன் துறைமுகத்திற்கு வருகின்ற கப்பல்களுக்காக.
இக்கட்டளைகள் கடலில் பயணம் செய்யும் கோப்ரல் ஒருவருடனான அல்லது கோப்ரல் ஒருவரற்ற கப்பல்களுடன் தொடர்புபடும்.
மீன்பிடித் துறைமுகங்களுக்கு வருகின்ற மீன்பிடிப் படகுகளிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில் விண்ணப்பப் படிவத்தினை குறித்த மீன்பிடித் துறைமுகத்தின் முகாமையாளர்களினால் அனுமதித்தல் வேண்டும்.


கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் பதிவுசெய்யப்பட்ட சேவை வழங்குநர்

MP/WRS/4 மற்றும் MP/WRS/2 விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிட்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் MP/WRS/5 ஒப்பந்தம்/பிணை, கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் தலைவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளல் வேண்டும்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் வெளியிடப்படுகின்ற பதிவுச் சான்றிதழானது உரிய ஆண்டிற்கான சேவை வழங்குவதற்காக மாத்திரம் செல்லுபடியாகும்.
கழிவுப் பொருட்களை மீள் உற்பத்தி செய்வதற்காக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் கீழ் தகுதியானவர்கள் காணப்படுகின்றனர்.
MP/WRS/2 அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக MP/WRS/3 (ஒவ்வொரு தனி மீள் உற்பத்திப் பணிக்காகவும்) அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
MP/WRS/2 வரையிலான தொகுதிகளில் கழிவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களினால் தமக்காக தனியானதொரு பணிக்காக சேவை அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரம் பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் ஒன்றினை சமர்ப்பித்தல் வேண்டும்.
உங்கள் நிறுவனத்தில் இடம்பெறுகின்ற முகவரி மாற்றம், தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் போன்ற சகல மாற்றங்கள் பற்றியும் உடன் அறிவித்தல் வேண்டும்.


வருடாந்தப் பதிவு

மேற்படி சேவையினை வழங்குவதற்காக விருப்பமான தரப்பினரிடமிருந்து ஒவ்வொரு வருடமும் விண்ணப்பம் கோரப்படுவதுடன், தகைமை பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு:


வர்த்தகப் பதிவுச் சான்றிதழ்.
துறைமுக அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற துறைமுகத்தினுள் இயங்குவதற்கான அனுமதிப் பத்திரம் (உரிய தொகுதிக்காக).
கழிவுப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான போக்குவரத்து, வெளியேற்றுவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வழங்கப்படும் செல்லுபடியான கழிவுப் பொருள் முகாமைத்துவ அனுமதிப் பத்திரம் (2000 ஆண்டின் 53 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தம் செய்யப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் 23 ஆம் பிரிவு மற்றும் இலக்கம் 1534/18 ஆம் இலக்கம் மற்றும் 2008.02.01 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் சூழல் பாதுகாப்பு மற்றும் தரம் பற்றிய ஒழுங்கு விதிகளின் II ஆம் பிரிவின் பிரகாரம் எரி எண்ணெய் கழிவுப் பொருட்களை சேகரித்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் கொண்டு செல்வதற்காக இந்த அதிகாரசபையினால் கழிவு முகாமைத்துவ அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் (SWML) பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
குப்பைகளை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச சபையினால் வழங்கப்பட்ட செல்லுபடியான அனுமதிப் பத்திரம்.
கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான உபகரணங்கள் மற்றும் பயிற்றப்பட்ட ஊழியர்கள் உள்ளனர் என்பதற்கான சான்றிதழ். கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற செலவினத்திற்கேற்ப எண்ணெய் அகற்றுவதற்குப் பயன்படுத்தும் உபகரணங்களை பராமரிப்பதற்கான இயலுமை.

உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மேற்படி (அ) முதல் (ஈ) வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளுடன், இந்த அலுவலகத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு அனுப்புதல் வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களுக்கு 10% நிருவாகக் கட்டணமொன்று அறவிடப்படும்.

பதிவு செய்யும் முறை

பதிவுசெய்வதற்கான சான்றிதழ் குறித்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அந்த ஆண்டின் திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும்.
உரிய முறையில் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் எந்தவொரு அலுலவகத்திற்கும் அலுவலக நாட்களில் வழங்க முடியும்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா இல்லையா என்பது பற்றி விண்ணப்பதாரருக்கு பதிவுத் தபாலல் மூலம் அறிவிக்கப்படும்.
விண்ணப்பப் படிவம் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 14 வேலை நாட்களினுள் உரிய கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையுடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்துகொள்ளல் வேண்டும்.
விண்ணப்பதாரர் ஒருவர் கழிவுப் பொருள் ஒன்றிற்கு அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தொகைக்கு தகைமை பெற முடியும்.
மேலே (ஈ) இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாட்டினை பூர்த்தி செய்ததன் பின்னர் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.


தனியான கழிவுப் பொருட்களை அகற்றும் வசதியொன்றினை வழங்குவதற்கான அனுமதிப் பத்திரம்

கழிவுப் பொருட்களை அகற்றும் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உத்தேசித்துள்ள அனைத்து வழங்குநர்களும் அதற்காக உரிய மாதிரிக்கேற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் ஒன்றினை குறித்த சேவையினை வழங்குவதற்கு எதிர்பார்க்கும் திகதிக்கு முந்திய வேலை நாள் ஒன்றில் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபைக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
பதிவு செய்த சேவை வழங்குநர்களின் விண்ணப்பப் படிவங்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
வார நாட்களில் காலை 8.30 மணி முத்ல் மாலை 4.15 மணி வரையிலும், சனிக்கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 12.30 மணி வரையிலும்  கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.


தனியான கழிவுப் பொருட்களை அகற்றும் வசதியொன்றினை வழங்குவதற்காக அனுமதிப் பத்திரம் வழங்குதல்

விண்ணப்பப் படிவத்துடன் உரிய கட்டணத்தை செலுத்தும் வரையில் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரையில் கப்பல் ஒன்றிலிருந்து கழிவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.
பதிவு செய்த வழங்குநர்களுக்கு அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதியைச் சேர்ந்த கழிவுப் பொருட்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.


பரீட்சித்தல்

கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் அனுமதியினைப் பெற்றுக்கொண்ட எந்த உத்தியோகத்தரும் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கையின் சகல பிரிவுகள் தொடர்பாகவும் பரீட்சிப்பதற்கும், சூழலை பாதிக்காத வகையில் கழிவுப் பொருட்களை அகற்றுதல் இடம் பெறுகின்றன என்பதனை உறுதி செய்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேற்படி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்தலும் அடங்கும்.

கண்காணித்தல்

MP/WRS/3 படிவத்தில் 1, 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, சேவையினை வழங்கி 72 மணித்தியாலங்களுக்குள் வழங்கிய இடத்திற்கு மீளப் பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.
மேற்படி நிபந்தனைகளை மீறுவோரது அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது.

தவறுகள்

பாதுகாப்பான முறையிலான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்கத் தவறும் பட்சத்தில் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும்.
தொடர்ச்சாயாக பாதுகாப்பான முறையில் கழிவுப் பொருட்களை அகற்றும் பணிகளை வழங்குவதற்கு முடியாமல் போதல் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்குக் காரணமாக அமையும்.
இரத்துச் செய்த அனுமதிப் பத்திரமொன்று மீள ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளுக்காக அனுமதியினைப் பெற்று அப்பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமல் விடுதல் பதிவினை இரத்துச் செய்வதற்கு காரணமாக அமையும்.
வழங்கப்பட்டுள்ள உரிய காலத்தினுள் விண்ணப்பப் படிவத்தினை உரிய முறையில் பூர்த்தி செய்து இந்த அதிகாரசபையிடம் வழங்காது விடல் பதிவினை இரத்துச்  செய்வதற்குக் காரணமாக அமையும்.
பதிவு இரத்துச் செய்யப்பட்ட சேவை வழங்குநர் ஒருவர் மீண்டும் பதிவு செய்யப்பட மாட்டார். (கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் குறித்த பிரிவுகளின் கீழ் இத்தவறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.)

கப்பல்களில் பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை சுழலுடன் கலத்தல்.

Permission should be taken to transport, dispose / store waste in accordance with standards set by Central Environment Authority / Local Government Authorities.

Tariff

விண்ணப்பக் கட்டணம் ரூ. 1500.00
கொழும்பு துறைமுகத்திற்கான பதிவுக் கட்டணம்
திண்மக் கழிவுப் பொருளுக்காக மாத்திரம் ப. கட்டணம் ரூ. 30000.00
எண்ணெய் கழிவுப் பொருளுக்காக மாத்திரம் ப. கட்டணம் ரூ. 70000.00
ஏனைய துறைமுகங்களுக்கான பதிவுக் கட்டணங்கள்
திண்மக் கழிவுப் பொருளுக்காக மாத்திரம் ப. கட்டணம்
ரூ. 7000.00
எண்ணெய் கழிவுப் பொருளுக்காக மாத்திரம் ப. கட்டணம் ரூ. 13000.00
அனைத்துத் துறைமுகங்களுக்கும் எண்ணெய் மற்றும் திண்மக் கழிவுப் பொருள் என்பவற்றிற்கு ரூ. 120000.00
தனி கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் ரூ. 3000.00
குறிப்பு : வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரையில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரையிலும் சனிக் கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 12.00 மணி வரையிலும் (ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர்ந்த)

கொடுப்பனவுகள்

பணம் செலுத்த வேண்டிய பெயர் : கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை

செலுத்தக் கூடிய முறைகள் : பணமாக / வங்கிக் கட்டளைகள் மூலம்

தனிநபர் கழிவகற்றல் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கான முறைகள்:

MP/WRS/3 படிவத்தைப் பூர்த்தி செய்து முகவர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரமளிக்கும் படிவம் ஒன்றுடன் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் தலைவருக்கு கடிதமொன்றின் மூலம் சமர்ப்பித்தல் வேண்டும்.
தனிநபர் பணிக்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடம் செலுத்துதல் வேண்டும்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் வெளியிடப்படும் ஐந்து பிரதிகளைக் கொண்ட MP/WRS/3 விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளவும். விண்ணப்பப் படிவங்கள் விசேட கார்பன் பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது.  அதனால் அனைத்துக் குறிப்புக்களையும் பேனா ஒன்றின் மூலம் ஊன்றி மூலப்பிரதியில் எழுதவும்.
அச்சகல பிரதிகளும் துறைமுக அதிகார சபைக்குப் பெற்றுக் கொடுத்ததன் பின்னர் அந்த அதிகார சபையின் Navigation பிரிவிடமிருந்து மூன்றாம் பிரதியைப் பெற்றுக்கொண்டு MP/WRS/3 படிவத்தின் இரண்டாம் பிரதியை இலங்கைத் துறைமுக அதிகார சபையிடம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.
கழிவகற்றல் செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர் மூலப் பிரதியின் 14(1) படிவத்தை கப்பல் தலைவராலும் 14(2) படிவத்தை சேவை வழங்குநராலும் பூர்த்தி செய்து மூலப் பிரதியை கப்பல் தலைவரிடம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.
MP/WRS/3 படிவத்தின் ஐந்தாவது பிரிவான இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பிரதியைப் பெற்றுக் கொண்டு அதன் மூன்றாவது பிரதியை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரதான விவாரண உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
MP/WRS/3 படிவத்தின் ஆறாவது பிரிவில் கழிவுப் பொருட்களை அகற்றும் குறித்த இடத்தின் உரிமையாளரினால் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரினால்  உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
பணிகளைப் பூர்த்தி செய்து 72 மணித்தியாலங்களுக்குள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட முதலாவது பிரதியை அதாவது கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபைக்கு மீள அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள MP/WRS/3 படிவத்தின் முதலாவது பிரதியை கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
MP/WRS/3 படிவத்தின் நான்காவது பிரதியை பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர் தம்வசம் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
யாதேனுமொரு நடவடிக்கையினை இரத்துச் செய்ய வேண்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் கப்பல் முகவரினால் அதுபற்றி உறுதி செய்யும் கடிதமொன்றினை சமர்ப்பித்தல் வேண்டும்.

திடீர் விபத்தொன்றின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்

உடனடியாக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை மற்றும் துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புப் பிரிவிடம் அறிவித்தல் வேண்டும்.
Initiate action to minimize the damage using your own resources

General Instruction

Registered Service Providers should supply the list of names of the person authorized to Individual reception permits from MEPA on their behalf
If any person not listed in 6.1 above, make a request a letter of authorization should be provided.
Any change of the Address, telephone numbers etc should be notified to the MEPA immediately of such changes personally signed by the Service Provider.
Any changes to above mentioned details will be notified to all Registered Service Providers.

வருடாந்த அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிப்பதற்காக இங்கே க்ளிக் செய்யவும்.

தனி அகற்றல் வசதியொன்றினை வழங்குவதற்கான அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பதிவு செய்தல் பற்றிய அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

Last Updated ( Monday, 30 March 2020 06:15 )  

செய்திகளும் சம்பவங்களும்

07 more days for the World Ocean Day 07 more days for the World Ocean Day   The World Ocean Day will be held on June 8,   மேலும்
World Ocean Day - Logo Great Ocean,Our Future -2020මහසයුර අපේ ,මතු අනාගතේ-2020உயிர் வாழும் சமுத்திரம் எமது எதிர்காலம்-2020   மேலும்
National Workshop For Awareness Raising on Biofouling Management and National Task Force Meeting National Workshop For Awareness Raising on Biofouling Management and National Task Force Meeting .... 25th & 26th of February 2020 @ Sri La... மேலும்
Extends a very warm welcome to the new Chairman Dharshani Lahandapura Extends a very warm welcome to the new Chairman Dharshani Lahandapura   மேலும்
MEPA started year 2020 in an environmentally friendly manner MEPA started year 2020 in an environmentally friendly manner....   மேலும்
MEPA Cricket Tournament 2019 MEPA Cricket Tournament 2019, On 30th November @ Kirimatiyagara Playground Organize by: MEPA Welfare - Marine Environment Protection Authori... மேலும்
2nd runner-up for the best annual reports and accounts awards for public sector – 2017   Marine Environment Protection Authority is awarded the 2nd runner-up for the best annual reports and accounts awards for public sector – ... மேலும்

சேவை வழங்குனர்கள்