ஓஷன் வாட்ச் (Ocean Watch)
கரையோரம் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் ஏற்படும் மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் இணைய அடிப்படையிலான மொபையில் செயலி
இலங்கை, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தனித்துவமான தீவாகும். இந்த நாட்டின் கடல் பரப்பளவு அதன் நிலப்பரப்பை விட எட்டு மடங்கு அதிகம். நாட்டிற்கு சுமார் 1,700 கிலோமீட்டர் நீளமான கடற்கரை மற்றும் கண்டல் தாவரதொகுதிகள் போன்ற கடலுடன் இணைந்துள்ள பல்வேறு கடல்சார் சூழலியல் அமைப்புகள் உள்ளன.
எனினும், மனித செயல்பாடுகளின் காரணமாக, கடல்சார் மற்றும் கடல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரையிலிருந்து ஏற்படும் மாசுபாடு சுமார் 90% ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளின் வழியாக கழிவு பொருட்கள் கடலில் மற்றும் கடற்கரையில் சேர்க்கப்படுகின்றன. இந்த கடல் மாசுபாடு மனிதர்களின் வாழ்வினையும் கடல்சார் உயிரினங்களின் ஆரோக்கியத்தையும் மேலும், சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளையும் வெகுவாக பாதிக்கிறது. இவை நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்குவகிக்கிறது
இந்த சவால்களை எதிர்கொள்ள ஒரு திறமையான அமைப்பு அவசியமாகும். கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) கடற்கரை மாவட்டங்களில் உள்ள நகராட்சி, நகர மற்றும் மாகாண சபைகளுடன் இணைந்து 84 அமலாக்க பிரிவுகளை அமைத்துள்ளது. இவை கடல்சார் பகுதிகள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் மாசுபாடு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துகின்றன.
இந்த முயற்சிகளை மேம்படுத்துவதற்காக, MEPA கடல்சார் பகுதிகளில் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக அனைத்து பங்காளிகளின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கியுள்ளது. கடல் சூழலினைப் பாதுகாக்கவும் மாசுபாட்டைத் தடுக்கவும் MEPA ஒரு புதிய இணையதள அடிப்படையிலான மொபைல் செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியானது நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மாசுபாடு தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக்க உதவுகிறது.
மொபைல் செயலி பயன்பாட்டின் அம்சங்கள்:
கடற்கரை மற்றும் துறைமுக தூய்மைப் பணிகள்:
கடல்சார் கழிவுகளை குறைக்கும் வடிகட்டிகளை (Ocean Strainer) நிறுவுதல்:
கடற்கரை முகாமைத்துவம்:
கடற்கரை மற்றும் துறைமுக தூய்மைப் பணிகள்:
தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் கடற்கரை மற்றும் மீன்பிடி துறைமுக தூய்மைப் பணிகளுக்கு பதிவு செய்யலாம். இந்த செயலி அமைப்பாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை எளிதாக்கும்.
கடல்சார் கழிவுகளை குறைக்கும் வடிகட்டிகளை (Ocean Strainer) நிறுவுதல்:
கடலுக்கு செல்லும் கழிவுகளை கட்டுப்படுத்த Strainer அமைப்புகளை நிறுவுவதற்கான இடங்கள் பற்றிய தகவல்களை இந்த செயலி வழங்கும். மேலும், கால்வாய்களின் விவரங்களும் அவற்றை பராமரிக்கும்நிறுவனங்களின் தொடர்பு கொள்ளும் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
கடற்கரை முகாமைத்துவம்:
தூய்மைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட கடற்கரைகளைப் பற்றிய விவரங்கள் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த கடற்கரைகளை நிர்வகிக்க மற்றும் பராமரிக்க வாய்ப்பு பெறலாம்.
மேலும், பொதுமக்கள் கடல்சார் சூழலுடன் தொடர்புடைய எந்தவொரு முறைப்பாட்டையும்புகார் அளிக்க இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.
MEPA, இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் பெருமைப்படுகிறது. இந்த முயற்சிக்கு அவர்கள் நம்பகமான சுற்றுச்சூழல் மேம்பாட்டு பங்காளர்பளாக உதவுகின்றனர்.
“Ocean Watch” முயற்சியின் மூலம் கடல்சார் சூழலைப் பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான கடற்கரையை உருவாக்கவும் நாங்கள் அனைவரும் கைகோர்ப்போம்!
மேலும் தகவல்களுக்கு: www.oceanwatch.lk