நீலக் கொடி கடற்கரையாக மாற்றும் திட்டம் – MEPA

நீலக் கொடி கடற்கரை திட்டம் என்றால் என்ன?
the blue flag beaches

நீலக் கொடி கடற்கரையாக மாற்றும் திட்டம் - MEPA

நீலக் கொடி கடற்கரை திட்டம் என்றால் என்ன?

நீலக் கொடி கடற்கரை என்ற மகுடச்சின்னம் டென்மார்க்(கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான நிறுவனம் (Foundation for Environmental Education) (FEE) வழங்கும் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் அங்கீகாரமாகும். இந்த விருது சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, நீரின் தரம்,  சுற்றுச்சூழல்முகாமைத்துவம் மற்றும்  பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகிய நான்கு முக்கிய துறைகளில் 33 நிபந்தனைகளை பூர்த்தி செய்த கடற்கரைகளுக்கு வழங்கப்படுகிறது. உலகளவில் 5,400க்கும் மேற்பட்ட கடற்கரைகள் நீலக் கொடி கடற்கரை அங்கீகாரம் பெற்றுள்ளன, அதில் இந்தியாவில் 12 கடற்கரைகள் அடங்கும். ஆனால், இலங்கையில் இதுவரை எந்த கடற்கரையும் இந்த அங்கீகாரத்தை பெறவில்லை.

இலங்கையில் நீலக் கொடி கடற்கரைதிட்டமானது 2023 முதல்,MEPA மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புமற்றும் சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து நீலக் கொடி கடற்கரை திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 33 நீலக் கொடி  கடற்கரைகளை உருவாக்குவதற்கான நோக்கம் உள்ளது, இது ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, முதல் கட்டத்தின் கீழ்பாசிக்குடா, அறுகம்பே, உனவடுன, பெந்தோட்ட, மற்றும் மிரிஸ்ஸஆகிய ஐந்து கடற்கரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கடற்கரை முகாமைத்துவ  குழுக்கள் (BMCs) மற்றும் அதன் வகிபாகம்
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, இந்த ஐந்து கடற்கரைகளுக்கு தனித்தனியாககடற்கரை முகாமைத்துவ குழுக்கள் (BMCs) அமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் இணைந்து நீலக் கொடி கடற்கரைக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சுற்றுச்சூழல் நிலைக்கும் தன்மையை மேம்படுத்துவதோடு, இலங்கையை ஒரு முன்னணிபசுமைச் சுற்றுலா (Eco-Tourism) தளமாக மாற்ற உதவும்.

வெளிநாட்டுஅலுவல்கள், வெளிநாட்டுவேலைவாய்ப்புமற்றும்சுற்றுலாத்துறைஅமைச்சுநேரடியாகபாசிக்குடா மற்றும் அறுகம்பேகடற்கரைகளை நீலக் கொடி கடற்கரைகளாக மாற்று நிதி வழங்கியுள்ளது. இந்த கடற்கரைகள் ஏற்கனவே நீலக் கொடி கடற்கரைக்கான அங்கீகாரம் பெற தேவையான 33 நிபந்தனைகளில் பலவற்றை பூர்த்தி செய்துள்ளன. சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் பணிகளில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

மறுபுறம், பெந்தோட்ட, உனவடுன,மற்றும் மிரிஸ்ஸ ஆகிய கடற்கரைகளை நீலக் கொடி கடற்கரை தரத்திற்கு கொண்டு செல்லதனியார் துறை நிறுவனங்கள்முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பொது-தனியார் கூட்டாண்மை, சுற்றுச்சூழல் நிலைக்கும் தன்மை மற்றும் முகாமைத்துவஉதவி நடவடிக்கைகளை மேம்படுத்த அதிகளவில் உதவுகிறது.

MEPA 2025 ஆம் ஆண்டுக்குள்பாசிக்குடா மற்றும் பெந்தோட்டகடற்கரைகளை இலங்கையின் முதல் நீலக் கொடி கடற்கரைகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம்இலங்கையின்  பசுமைச்சுற்றுலா துறையில்ஒரு முக்கிய மையில் கல்லாகஅமையும்.

இந்த கடற்கரைகளின் மேம்பாடு மூலம்,

  • சுற்றுச்சூழல் தரநிலைகள் உயர்த்தப்படும்.
  • சுற்றுச்சூழல் உணர்வுள்ள சுற்றுலாப் பயணிகளைஈர்க்க வழி வகுக்கும்.
  • உள்ளூர் பொருளாதார வளர்ச்சிமேம்படும்.
  • இலங்கையை நிலைத்த நீடித்த சுற்றுலாவுக்கானதளமாக உலகளாவிய ரீதியில் மாற்ற உதவும்.
Our services
MEPA