சூழலியல் மறுசீரமைப்பு
சூழலியல் மறுசீரமைப்பு என்பதுபாதிக்கப்பட்ட, சேதமடைந்த, அல்லது அழிக்கப்பட்ட சூழலியல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவுவதற்கான செயலாகும். இதுசூழலியல் அமைப்பின் கட்டமைப்பு, செயல்பாடு, மற்றும் இயற்கையான செயல்முறைகளை மீண்டும் நிறுவ, உயிர்ப்பல்வகைமை(Biodiversity), சூழலியல் சேவைகள் (Ecosystem Services), மற்றும் மீள்தன்மையை (Resilience) மேம்படுத்த உதவுகிறது.இது இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் நீடித்த எதிர்காலத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.
இதை செயல்படுத்துவதற்காக, கடல்சார் சூழல்பாதுகாப்பு அதிகாரசபை(MEPA) இலங்கையின் கரையோர மாவட்டங்களில்பவளப்பாறை மற்றும் கண்டல் தாவர சூழலியல் மறுசீரமைப்பு திட்டங்களைமேற்கொண்டு வருகிறது.
சூழலியல் மறுசீரமைப்பின் நன்மைகள்
உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு (Biodiversity Conservation)
காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் (Climate Change Mitigation)
மேம்படுத்தப்பட்டசூழலியல் சேவைகள் (Enhanced Ecosystem Services)
பொருளாதார வாய்ப்புகள் (Economic Opportunities)
இயற்கை பேரழிவுகளுக்கு எதிரான பாதுகாப்பு (Increased Resilience to Natural Disasters)
சூழலியல் மறுசீரமைப்புக்காக செயல்படும் உலகளாவிய திட்டங்கள்
ஐக்கிய நாடுகள் சூழலியல் மறுசீரமைப்பு தசாப்தம் (UN Decade on Ecosystem Restoration 2021–2030)
Bonn சவால் (Bonn Challenge)
உயிரியல் பல்வகைமை ஒப்பந்தம் (Convention on Biological Diversity - (CBD)
கண்டல் தாவரசூழலியல்தொகுதிகள் (Mangrove Ecosystems)
கண்டல் தாவரதொகுதிகள்என்பதுவெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் தனித்துவமான கரையோர வாழ்விடங்கள்ஆகும். இவைஉப்புநீர் மற்றும் நிலம் சந்திக்கும் இடத்தில் வளரக்கூடிய மரங்கள் மற்றும் புதர்களால் அமையகூடியவை.
இவைஉலகின் மிக உயர்ந்த உயிரியல் பல்வகைமைமிக்க சூழலியல் அமைப்புகளில் ஒன்றாகவிளங்குகின்றன. கண்டல் தாவரதொகுதிகள்சுற்றுச்சூழலியல், பொருளாதார மற்றும் சமூக நலன்களை வழங்கும் முக்கியமான வாழ்விடங்கள்ஆகும்.
மறுசீரமைப்பு பின்வரும் முறைகளில் செய்யலாம்:
இயற்கை புதுப்பிப்பு (Natural Regeneration)
நடுகைசெயல்பாடு (Active Planting)
நீரியல் மறுசீரமைப்பு (Hydrological Restoration)
சமூக அடிப்படையிலான மறுசீரமைப்பு (Community-Based Restoration)
பவளப்பாறை மறுசீரமைப்பு (Coral Restoration)
பவளப்பாறைகள்உலகிலேயே • உயிர்ப்பல்வகைமை(Biodiversity) அதிகம் கொண்டமுக்கியமான கடல் சூழலியல் அமைப்புகளில் ஒன்றாகவிளங்குகின்றன. இவைகரையோரங்களை பாதுகாக்க, உணவுப் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்த, சுற்றுலா மற்றும் மீன்பிடி துறைகளுக்கு ஆதரவாகஉள்ளன.
ஆனால், காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள், மாசுபாடு, மற்றும் இயற்கை பேரழிவுகள்காரணமாகபவளப்பாறைகள் அழிவை நோக்கி செல்கின்றன.
பவளப்பாறைகள்பவளவெளுப்பு(Coral Bleaching) என்ற முக்கியமான பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இதுகடல் வெப்பநிலை, வெளிச்சம்மற்றும்ஊட்டச்சத்துக்களின் அளவு மாறுபடுவதால்ஏற்படுகிறது.
பவளப்பாறை மறுசீரமைப்பு முறைகள்
பவள வளர்ப்பு மேடைகள்
- In situ வளர்ப்பு மேடைகள்- பவளத் துண்டுகள் கயிறுகள்,சட்டங்கள் அல்லது மரங்கள் போன்ற நீருக்கடியில் உள்ள கட்டமைப்புகளில்நேரடியாக இயற்கை சூழலில் வளர்க்கப்படுகின்றன.
- Ex situ வளர்ப்பு மேடைகள்- பவளப்பாறைகள் நிலத்தில் அமைக்கப்பட்ட தொட்டிகள் அல்லது வசதிகள் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் வளர்க்கப்பட்டுபின்னர்மீண்டும் பாறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன.
துண்டாக்குதல் (Fragmentation)
சிறுபகுதி துண்டாக்குதல் (Micro Fragmentation)
செயற்கை பவளப்பாறைகள் (Artificial Reefs)
இளம் பவள விதைப்பு (Larval Reseeding)
மரபணுப்பொறியியல் மற்றும் பரிணாமவளர்ச்சிக்கு உதவுதல்
மின்சாரப்படுத்தப்பட்ட பவளப்பாறைகள் -Electrified Reefs
பவளப்பாறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
1. மதிப்பீடு மற்றும் திட்டமிடல் (Assessment and Planning)
- பவளப்பாறையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தல்.
- மறுசீரமைப்பு முன்னுரிமைகளை தீர்மானித்தல்.
2. சமூக ஈடுபாடு (Community Engagement)
- o உள்ளூர் மீனவர்கள், சுற்றுலா தொழிலாளர்கள், மற்றும் தன்னார்வலர்களை விழிப்புணர்வு மற்றும் மறுசீரமைப்பில் ஈடுபடுத்துதல்.
3. நடைமுறையில் செயல்படுத்தல் (Implementation)
- பவளப்பாறை மறுசீரமைப்புக்கான முறைகளை செயல்படுத்தல்.
- மாற்றியமைக்கப்பட்ட பவளப்பாறைகளின் வளர்ச்சி மற்றும் உயிர் பிழைப்பு விகிதத்தை கண்காணித்தல்.
4. நீண்டகால கண்காணிப்பு (Long-Term Monitoring and Adaptation)
- பவளப்பாறை வளங்களை தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் நிலைமையை ஆராய்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் மாத்தறைஆகிய மாவட்டங்களில்பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது.