கடற்கரை பராமரிப்பாளர்கள்

கடற்கரை மாசுபாட்டை எதிர்கொள்ள கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துவருகிறது, அதில் கடற்கரை பராமரிப்பாளர் திட்டமும் அடங்கும்.
BEACH CARE TAKERS MEPA

கடற்கரை பராமரிப்பாளர்கள்

கடற்கரை மாசுபாட்டை எதிர்கொள்ள கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துவருகிறது, அதில் கடற்கரை பராமரிப்பாளர் திட்டமும் அடங்கும்.

இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் நாடு முழுவதும் கடற்கரைகளை தூய்மையாக வைத்திருப்பதாகும். இதன் முதற்கட்ட முயற்சியானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி காலி மாவட்டத்தின் ததல்லா கடற்கரையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு உள்ளூர் நபர் கடற்கரை பராமரிப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவரது பொறுப்பு, சுமார் 1 கிலோமீட்டர் நீளமான மாசுபட்ட கடற்கரை பகுதியை பராமரிப்பதாகும்.

கடற்கரை பராமரிப்பாளர்களின் பொறுப்புகள்:

கடற்கரையை நிரந்தரமாக கழிவுகளற்றதாக வைத்திருத்தல்.
அவர்களின் சேவைக்கான விரிவான ஈடுசெய்தளிக்க, கடற்கரை பராமரிப்பாளர்களுக்கு பொருளாதார உதவியுடன் சமூக பங்கேற்பையும் ஊக்குவிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக, MEPA, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் (DoSD) இணைந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை கடற்கரை பராமரிப்பாளர்களாக தேர்ந்தெடுக்கிறது. MEPA  மற்றும்DoSD ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஆழரு) கைச்சாத்திடப்பட்ட பிறகு, அவர்களின் பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன:

DoSD
கடற்கரை பராமரிப்பாளர்களை தேர்வு செய்து, அவர்கள் செயல்பாடுகளை கண்காணித்தல்
MEPA
மாசுபட்ட கடற்கரை பகுதிகளை அடையாளம் காணுதல், கடற்கரை பராமரிப்பாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல், மற்றும் அவர்களுக்கான சன்மானத்தினை வழங்குதல்.

இந்த கூட்டுமுயற்சியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமூக நலனையும் முன்னிலைப்படுத்துகிறது. இது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் கீழ், கடற்கரை பராமரிப்பாளர்கள் உக்காத கழிவுகளை மட்டும் சேகரிக்க பொறுப்பேற்கின்றனர். மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களான Pநுவு பாட்டில்கள், பிளாஸ்டிக்குகள், கண்ணாடி மற்றும் உலோகங்கள் போன்றவை, உரிய சேகரிப்பாளர்களுக்கும் மீள்சுழற்சி நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள கழிவுகள், உள்ளூhட்சி அதிகாரசபைகளுக்கு ஒப்படைக்கப்பட்டு, முறையாக அகற்றப்படுகின்றன.

தற்போது 122 கடற்கரை பராமரிப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதை நாங்கள் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம், இதை விரிவுபடுத்தி, நாடு முழுவதும் 200 மாசுபட்ட கடற்கரை பகுதிகளில் 200 பராமரிப்பாளர்களை நியமிக்க MEPA திட்டமிட்டுள்ளது.

கடற்கரைகள் இயற்கையின் விலைமதிப்பற்ற பொருட்கள். அவை அனைவருக்கும் சுத்தமாகவும் மனநிம்மதியை அளிக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இவற்றை எதிர்காலத்திற்காக பாதுகாக்க MEPA;இ பொது சமூகப் பொறுப்பு (CSR) நிதிகள் மூலம் இந்த தேசிய முக்கியத்துவமிக்க திட்டத்திற்கு ஆதரவளிக்க தனியார் நிறுவனங்களை தங்களுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்புவிடுக்கிறது

கடற்கரை பராமரிப்பாளர்கள்
0
நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட மாசுபட்ட கடற்கரை பகுதிகள்
0
Our services
MEPA