நாட்டின் எண்ணெய் மற்றும்ஆபத்தான தீங்கு விளைவிக்கும் பொருட்களின்கசிவுகளைஇலங்கையின் நீர்ப்பகுதிகளில் பாதுகாக்கும் நடவடிக்கைகள்
தேசிய எண்ணெய் மற்றும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கசிவுகளுக்கான அவசரத் திட்டம்(NOHSCP):
இலங்கை, பரபரப்பான கிழக்கு-மேற்கு கடல் வழியில் அமைந்துள்ளதால், நாள் தோறும் 400 கப்பல்களையும் ஆண்டுதோறும் 5,000 தற்காலிகதுறைமுகதரிப்புக்களையும்காண்கின்றது. துறைமுகச் செயற்பாடுகளின் விரிவாக்கம் மற்றும் எண்ணெய் சார்ந்த நடவடிக்கைகளின் அதிகரிப்புடன், எண்ணெய் மற்றும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் Hazardous and Noxious Substance (HNS)கசியும்வாய்ப்புகள் மிகுந்த அபாயத்தை உருவாக்குகின்றன, இது கடல் உயிரினங்களுக்கும் பொருளாதார நிலைக்கும்தன்மைக்கும் பெரிய அச்சுறுத்தலாகஇருக்கின்றது.
இந்த அபாயங்களை கையாள, 2000 ஆம் ஆண்டுமுதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்டின் எண்ணெய் கசிவுகளுக்கான திட்டம்பின்னர் 2004, 2008, 2012 மற்றும் 2016 ஆம்ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டு, தற்போது நாட்டின் எண்ணெய் மற்றும்HNS கசிவுகளுக்கான திட்டம் (NOHSCP) என புணரமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய கடல் விபத்துசம்பவங்களின் தூண்டுதலால், இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம் எண்ணெய் மற்றும் இரசாயனப் பொருட்கள் கசிவுகளை திறம்பட கையாள்வதற்கான முன்னேற்றப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முறைகளை உள்ளடக்கியுள்ளது.
நாட்டின் எண்ணெய் மற்றும் (Hazardous and Noxious Substance)HNS மற்றும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கசிவுகளுக்கான அவசரத் திட்டம் (NOHSCP) - டிஜிட்டல் டாஷ்போர்டு(Digital Dashboard)
NOHSCPஎன்பது எண்ணெய் மற்றும் HNS கசிவுகளை நிர்வகிப்பதற்கான விரிவான வழிகாட்டி ஆவணமாகும். இருப்பினும், அதன் விரிவான மற்றும் சிக்கலான அமைப்பு அவசரநிலைகளில் அதனை மேற்கோள் காட்டுவதற்கு சவாலாகஇருக்கிறது.
இதனை கையாள, ஒரு Digital Dashboardஉருவாக்கப்பட்டுள்ளது, இது பயனாளர்களுக்கு அவசர தேவைகளை எளிதாக மற்றும் விரைவாக அணுக அனுமதிக்கின்றது. இந்த Dashboard, அவசர காலங்களில் பதிலளிப்புகளை எளிதாக்குவதன் மூலம், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு சிறந்த ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது. தொடர்புடைய தரவுகள் மற்றும் நடைமுறைகள் உடனடியாக கிடைக்கின்றன, இதனால் ஒவ்வொரு விநாடியும் முக்கியமான நேரங்களில் விரைவான மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டபதிலளிப்பை உறுதிசெய்கிறது.