பங்கர் அனுமதி (கடல் சூழல் துகாப்பு)
பங்கரிங் என்பது கப்பல்களுக்கு அவற்றின் செயல்பாட்டு தேவைகளுக்கான எரிபொருளை வழங்கும் செயல்முறை ஆகும். இது ஒரு அதிக ஆபத்தான செயல்முறை ஆகும் ஏனெனில் தீப்பற்றல் அல்லது எண்ணெய் கசிவு போன்ற விபத்துகளைத் தவிர்க்க மிகுந்த கவனம் மற்றும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது இது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தகூடும். இலங்கையின் கடற்பரப்பில் பங்கரிங் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி அவற்றை பாதுகாப்பாக முன்னெடுக்க பங்கர் அனுமதி (கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு) 2011ஆம் ஆண்டு பங்கரிங் (கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு) ஒழுங்குமுறை எண் 02ல் உருவாக்கப்பட்டு 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி அன்று சிறப்பு அரசு வர்த்தமானி(எண் 1741/19)யில் வெளியிடப்பட்டது. இந்த ஒழுங்குமுறைகள் கடல் மாசு தடுப்பு சட்டம் எண் 35 (2008) அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
ஒரு செல்லுபடியான பங்கர் அனுமதி இல்லாமல் பங்கரிங் நடவடிக்கைகளை நடத்துவது சட்டவிரோதமானது. இந்த அனுமதி வழங்கும் முறைமையின் முக்கிய நோக்கங்களாவன:
எண்ணெய் சிந்தலை தடுப்பது
எண்ணெய் சிந்தலை தடுப்பது
பாதுகாப்பான எரிபொருள் நிரப்புதல்
எரிபொருள் இணக்கம்
சட்ட மற்றும் ஒழுங்குமுறை விழிப்புணர்வு
பங்கர் அனுமதி ஒரு கெலண்டர் ஆண்டிற்கு செல்லுபடியாகும் பங்கர் கப்பல்களுக்கு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரநிலைகள் உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பாதுகாப்பு அளவுகோல்களுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளன.
விரிவான விண்ணப்ப பரிசீலனை, தணிக்கை, கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடல் சூழலை பாதுகாக்கவும் பங்கரிங் துறையில் இணக்கத்தையும் திறனையும் மேம்படுத்தும் நோக்குடன் MEPA செயற்படுகிறது.