உலக சமுத்திர தினம்

சமுத்திரங்கள் பூமியில் வாழ்க்கையின் நிலைத்தன்மைக்கான இயக்க சக்தியாக உள்ளன.
WORLD OCEAN DAY

உலக சமுத்திர தினம்

சமுத்திரங்கள் பூமியில் வாழ்க்கையின் நிலைத்தன்மைக்கான இயக்க சக்தியாக உள்ளன. வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின்(Oxygen)50% முதல் 80% வரை சமுத்திரங்களால் உற்பத்தியாகிறது. மேலும், சமுத்திரங்கள் கார்பன் டைஆக்ஸைட்டை(CO2) உறிஞ்சுவதன் மூலம் உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன. அவை உலகளவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகப்பெரிய உணவுக் களஞ்சியம் மற்றும் முதன்மையான புரத ஆதாரமாக உள்ளன. மேலும், சமுத்திரங்கள் மருத்துவப் மருத்துவப் பொருட்களின் வளங்கள் நிறைந்தவை. உலகளாவிய வர்த்தகத்தின் 90% கடல்மூலம் நடைபெறுவதால், அவை உலகளாவிய பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் சமுத்திரங்கள் தொடர்பான தொழில்களில் சுமார் 40 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சமுத்திரங்கள் மனிதகுலத்திற்கு உண்மையான ஆசீர்வாதமாக உள்ளன.

எனினும், நாம் சமுத்திரங்களையும் அவற்றின் கடல் உயிரினங்களையும் இழக்கும் விளிம்பில் இருக்கிறோம்.மனிதச் செயல்கள், குறிப்பாகக் கழிவுகளை கடலில் நேரடியாக வெளியேற்றுதல், கப்பல்களிலிருந்து பெருமளவிலான எண்ணெய் கசிவு ஏற்படல், கடல் அகழ்வு (ocean mining), கடல் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைக் கழிவுநீர் வெளியேற்றம், அனுமதியற்ற மீன்பிடித் தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தொழில் ஆகியவை கடல் மாசுபாடு மற்றும் கடல் அமிலமயமாதலுக்கு காரணமாகின்றன. இதன் விளைவாக, பெரிய மீன் இனங்களில் 90% அழிந்து, 50% பவளப் பாறைகளும் அழிந்துவிட்டன. மனித செயற்பாடுகள் சமுத்திரங்களுடனான இயற்கை சமநிலையை பாதித்துள்ளன. நாம் கடலிலிருந்து மீள் நிரப்ப முடியாத அளவுக்கு அதிகம் எடுத்து வருகின்றோம். இது தொடர்ந்தால், கடல் உயிரினங்கள் மற்றும் கடல் சூழலியல் முற்றிலும் அழிந்து போகும். எனவே, கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தவும் பாதுகாக்கவும் சிறப்பாக திட்டமிடப்பட்ட முகாமைத்துவ முறையும், உறுதியான விதிமுறைகளும் அவசியம். சமுத்திரங்களின் முக்கியத்துவம் பொதுமக்களுக்கு விளக்கப்பட வேண்டும், மேலும் அவற்றை பாதுகாக்கும் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். இதுவே நமது சமுத்திரங்களை பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.

உலக சமுத்திர  தினத்தின் கருத்து முதன்முதலில் 1992ல் ரியோ டி ஜெனீரோ புவி  உச்சி மாநாட்டில் முன்மொழியப்பட்டது.
இது உலகம் முழுவதும் பொதுவாக பகிரப்படும் சமுத்திரங்களை கொண்டாடவும், கடலுடனான தனிப்பட்ட தொடர்பை உணரவும், கடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் உருவாக்கப்பட்டது. மேலும், கடல்களை பாதுகாக்க மக்களுக்கு வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டது. பின்னர், 2008ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அவ்வருடம் ஜூன் 8ஆம் திகதியைஉலக சமுத்திர தினமாகஅறிவித்தது. இந்த நாளை கொண்டாடுவதன் மூலம் மனிதச் செயல்கள் கடலுக்கு ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல், கடல்களை பாதுகாக்க உலகளாவிய அமைப்பை  மேம்படுத்துதல், மற்றும் உலக மக்களை நிலையான சமுத்திர முகாமைத்துவத்திற்காக ஒன்றிணைத்தல் என்பன முக்கிய நோக்கங்களாகும்.

எங்கள் தேசத்தில், பலர் உணவு, வாழ்வாதாரம் மற்றும் பிற தேவைகளுக்காக சமுத்திரத்தில் தங்கி வாழ்கின்றனர்.
MEPA, இந்நாட்டின் கடல் பாதுகாப்பின் முன்னோடியாக, ஒவ்வொரு ஆண்டும் உலகப் சமுத்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், போட்டிகள் போன்றவை அடங்கும். கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் அதிகரிப்பதே இதன்  நோக்கமாகும்.

இறுதியாக, உலக  சமுத்திர  தினம் என்பது பெருங்கடல்களின் அழகை ரசிக்க, அவற்றின் வளத்தை வியக்க, பெருங்கடல்கள் பூமியில் வாழ்விற்கு ஏற்படுத்தும் முக்கியத்துவத்தை நினைவுபடுத்த, மேலும் பெருங்கடல்களிடமிருந்து பெறும் அனைத்திற்கும் நன்றி  செலுத்த ஒரு தினமாகும்.
அத்துடன், கடல்களை பாதுகாக்க உறுதி எடுக்க வேண்டிய ஒரு நாளாகவும் இது அமைகிறது. சமுத்திரங்களுக்கும்  மனிதர்களுக்கும் இடையிலான சமநிலையை நிரந்தரமாக உறுதிப்படுத்துவதற்காக, நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன்  செயல்பட வேண்டும்.

Our services
MEPA