சூழலியல் மறுசீரமைப்பு

சூழலியல் மறுசீரமைப்பு என்பதுபாதிக்கப்பட்ட, சேதமடைந்த, அல்லது அழிக்கப்பட்ட சூழலியல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவுவதற்கான செயலாகும்.
ECO SYSTEM RESTRORATION

சூழலியல் மறுசீரமைப்பு

சூழலியல் மறுசீரமைப்பு என்பதுபாதிக்கப்பட்ட, சேதமடைந்த, அல்லது அழிக்கப்பட்ட சூழலியல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவுவதற்கான செயலாகும். இதுசூழலியல் அமைப்பின் கட்டமைப்பு, செயல்பாடு, மற்றும் இயற்கையான செயல்முறைகளை மீண்டும் நிறுவ, உயிர்ப்பல்வகைமை(Biodiversity), சூழலியல் சேவைகள் (Ecosystem Services), மற்றும் மீள்தன்மையை (Resilience) மேம்படுத்த உதவுகிறது.இது இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் நீடித்த எதிர்காலத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.

இதை செயல்படுத்துவதற்காக, கடல்சார் சூழல்பாதுகாப்பு அதிகாரசபை(MEPA) இலங்கையின் கரையோர மாவட்டங்களில்பவளப்பாறை மற்றும் கண்டல் தாவர சூழலியல் மறுசீரமைப்பு திட்டங்களைமேற்கொண்டு வருகிறது.

சூழலியல் மறுசீரமைப்பின் நன்மைகள்

உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு (Biodiversity Conservation)
அபாயத்தில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கும், சுற்றுச்சூழலியல் பல்வகைமையை ஊக்குவிக்கும்.
காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் (Climate Change Mitigation)
மறுசீரமைக்கப்பட்ட காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் கார்பன் சிங்ஸ் (Carbon Sinks) உருவாக்கி, பச்சைவீட்டு வாயுக்களை(Greenhouse Gases) குறைக்க உதவும்.
மேம்படுத்தப்பட்டசூழலியல் சேவைகள் (Enhanced Ecosystem Services)
காற்று சுத்திகரிப்பு,நீரின் தரம், மண்வளம்மற்றும்மகரந்தச்சேர்க்கை(Pollination) ஆகியவற்றை மேம்படுத்தும்.
பொருளாதார வாய்ப்புகள் (Economic Opportunities)
சூழலியல் பாதுகாப்பு, பசுமை சுற்றுலா (Ecotourism), மற்றும் நிலையான நில முகாமைத்துவம் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இயற்கை பேரழிவுகளுக்கு எதிரான பாதுகாப்பு (Increased Resilience to Natural Disasters)
வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு போன்ற பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கும்.

சூழலியல் மறுசீரமைப்புக்காக செயல்படும் உலகளாவிய திட்டங்கள்

ஐக்கிய நாடுகள் சூழலியல் மறுசீரமைப்பு தசாப்தம் (UN Decade on Ecosystem Restoration 2021–2030)

உலகளாவிய அளவில்சூழலியல் சேதத்தைத் தடுக்க, நிறுத்த, மற்றும் மாற்றஉதவுவதற்கான முக்கிய முயற்சி.

Bonn சவால் (Bonn Challenge)

2030 க்குள் 350 மில்லியன் ஹெக்டேயர் நிலங்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டஉலகளாவிய திட்டம்.

உயிரியல் பல்வகைமை ஒப்பந்தம் (Convention on Biological Diversity - (CBD)

உலகளாவியஉயிரியல் பல்வகைமை இலக்குகளை அடையசூழலியல் மறுசீரமைப்பை ஊக்குவிக்கும்.

கண்டல் தாவரசூழலியல்தொகுதிகள் (Mangrove Ecosystems)

கண்டல் தாவரதொகுதிகள்என்பதுவெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் தனித்துவமான கரையோர வாழ்விடங்கள்ஆகும். இவைஉப்புநீர் மற்றும் நிலம் சந்திக்கும் இடத்தில் வளரக்கூடிய மரங்கள் மற்றும் புதர்களால் அமையகூடியவை.

இவைஉலகின் மிக உயர்ந்த உயிரியல் பல்வகைமைமிக்க சூழலியல் அமைப்புகளில் ஒன்றாகவிளங்குகின்றன. கண்டல் தாவரதொகுதிகள்சுற்றுச்சூழலியல், பொருளாதார மற்றும் சமூக நலன்களை வழங்கும் முக்கியமான வாழ்விடங்கள்ஆகும்.

மறுசீரமைப்பு பின்வரும் முறைகளில் செய்யலாம்:

இயற்கை புதுப்பிப்பு (Natural Regeneration)

பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாத்து, இயற்கையாக வளரச்செய்தல்.

நடுகைசெயல்பாடு (Active Planting)

பூர்வீக கண்டல் தாவர இனங்களை மீண்டும் நடுதல்.

நீரியல் மறுசீரமைப்பு (Hydrological Restoration)

கடல்நீர் ஓட்டத்தை மீட்டெடுத்து, நீர்த்தரத்தை மேம்படுத்துதல்.

சமூக அடிப்படையிலான மறுசீரமைப்பு (Community-Based Restoration)

உள்ளூர் சமூகங்களைஈடுபடுத்திநீடித்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளைமேற்கொள்ளுதல்.

பவளப்பாறை மறுசீரமைப்பு (Coral Restoration)

பவளப்பாறைகள்உலகிலேயே •     உயிர்ப்பல்வகைமை(Biodiversity) அதிகம் கொண்டமுக்கியமான கடல் சூழலியல் அமைப்புகளில் ஒன்றாகவிளங்குகின்றன. இவைகரையோரங்களை பாதுகாக்க, உணவுப் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்த, சுற்றுலா மற்றும் மீன்பிடி துறைகளுக்கு ஆதரவாகஉள்ளன.

ஆனால், காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள், மாசுபாடு, மற்றும் இயற்கை பேரழிவுகள்காரணமாகபவளப்பாறைகள் அழிவை நோக்கி செல்கின்றன.

பவளப்பாறைகள்பவளவெளுப்பு(Coral Bleaching) என்ற முக்கியமான பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இதுகடல் வெப்பநிலை, வெளிச்சம்மற்றும்ஊட்டச்சத்துக்களின் அளவு மாறுபடுவதால்ஏற்படுகிறது.

பவளப்பாறை மறுசீரமைப்பு முறைகள்

பவள வளர்ப்பு மேடைகள்

  • In situ வளர்ப்பு மேடைகள்- பவளத் துண்டுகள் கயிறுகள்,சட்டங்கள் அல்லது மரங்கள் போன்ற நீருக்கடியில் உள்ள கட்டமைப்புகளில்நேரடியாக இயற்கை சூழலில் வளர்க்கப்படுகின்றன.
  • Ex situ வளர்ப்பு மேடைகள்- பவளப்பாறைகள் நிலத்தில் அமைக்கப்பட்ட தொட்டிகள் அல்லது வசதிகள் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் வளர்க்கப்பட்டுபின்னர்மீண்டும் பாறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன.

துண்டாக்குதல் (Fragmentation)

உடைந்த பவள துண்டுகளை கற்கள் அல்லது செயற்கை கட்டமைப்புகளுடன் இணைத்து வளர்ச்சியைஊக்குவித்தல்.

சிறுபகுதி துண்டாக்குதல் (Micro Fragmentation)

பவளப்பாறைகளை சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல்.

செயற்கை பவளப்பாறைகள் (Artificial Reefs)

கொங்கிரீட், உலோகம், அல்லது உயிர்ப்பிரிகையடையக்டகூடிய பொருட்களால்செயற்கையாக உருவாக்கி பவள வளர்ச்சிக்கு உதவுதல்.

இளம் பவள விதைப்பு (Larval Reseeding)

பவளப்பாறை கருவிகளை சேகரித்து, வளர்த்து, பின்னர் பாதிக்கப்பட்ட பாறைகளில் விதைத்தல்.

மரபணுப்பொறியியல் மற்றும் பரிணாமவளர்ச்சிக்கு உதவுதல்

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை சிறப்பாகத் தாங்கக்கூடிய மேலும் வெப்பத்தைத் தாங்கும் அல்லது அதிக மீள்தன்மை கொண்ட பவள இனங்களை உருவாக்குதல்.

மின்சாரப்படுத்தப்பட்ட பவளப்பாறைகள் -Electrified Reefs

பவள வளர்ச்சியைத் தூண்டவும்மறுசீரமைப்பு முயற்சிகளை மேம்படுத்தவும் உலோகச் சட்டங்களில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் செலுத்தப்படுகிறது.

பவளப்பாறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள்

1. மதிப்பீடு மற்றும் திட்டமிடல் (Assessment and Planning)

  • பவளப்பாறையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தல்.
  • மறுசீரமைப்பு முன்னுரிமைகளை தீர்மானித்தல்.

2. சமூக ஈடுபாடு (Community Engagement)

  • o உள்ளூர் மீனவர்கள், சுற்றுலா தொழிலாளர்கள், மற்றும் தன்னார்வலர்களை விழிப்புணர்வு மற்றும் மறுசீரமைப்பில் ஈடுபடுத்துதல்.

3. நடைமுறையில் செயல்படுத்தல் (Implementation)

  • பவளப்பாறை மறுசீரமைப்புக்கான முறைகளை செயல்படுத்தல்.
  • மாற்றியமைக்கப்பட்ட பவளப்பாறைகளின் வளர்ச்சி மற்றும் உயிர் பிழைப்பு விகிதத்தை கண்காணித்தல்.

4. நீண்டகால கண்காணிப்பு (Long-Term Monitoring and Adaptation)

  • பவளப்பாறை வளங்களை தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் நிலைமையை ஆராய்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் மாத்தறைஆகிய மாவட்டங்களில்பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது.

Our services
MEPA